ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.621 கோடியாக குறைந்தது… பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு….

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.621 கோடியாக குறைந்தது… பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு….

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.621 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.730.32 கோடி ஈட்டியிருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.621 கோடியாக குறைந்தது… பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு….

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் செயல்பாடுகள் வாயிலான வருவாயாக ரூ.6,238 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவாகும். விற்பனை குறைந்ததால் அந்நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 13.35 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் அந்நிறுவனத்தின் விற்பனையை ஒப்பிட்டால் தற்போது 25 சதவீதம் குறைந்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.621 கோடியாக குறைந்தது… பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு….

2019-20 (2019 ஏப்ரல்-2020 மார்ச்) முழு நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் லாபம் 7.3 சதவீதம் உயர்ந்து ரூ.3,633 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் அந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 14.3 சதவீதம் வீழ்ந்து ரூ.28,836 கோடியாக குறைந்துள்ளது. அந்நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.25 அறிவித்துள்ளது.