ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,029.17 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,029.17 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 13.7 சதவீதம் அதிகமாகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு
ஹீரோ பைக்குகள்

2020 டிசம்பர் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.9,775.77 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.6,996.73 கோடியாக இருந்தது. கடந்த ஜனவரி 21ம் தேதியன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி வாகனங்கள் உற்பத்தி இலக்கை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு
ஹீரோ ஸ்கூட்டர்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.65ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. மேலும் 10 கோடி வாகனங்கள் உற்பத்தி என்ற சாதனை மைல்கல்லை குறிக்கும் நோக்கில் பங்குதாரர்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி (உதாரணமாக பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்ட்) சிறப்பு டிவிடெண்ட் அறிவித்துள்ளது. சிறப்பு டிவிடெண்டையும் கணக்கில் கொண்டால் பங்குதாரர்களுக்கு மொத்தம் ரூ.70 இடைக்கால டிவிடெண்ட் கிடைக்கும் என தெரிகிறது.