kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!! அசத்தலான ஆரம்ப விலை!!

Loading...

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ நிறுவனம் ஆட்டோமொபைல் பங்கு சந்தையில் புதிதாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் ஹீரோ நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. வருடம் தோறும் புதுப்புது ஸ்கூட்டர் மற்றும் கியர் ரக வண்டிகளை அறிமுகம் செய்து பயனாளிகளை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக இரண்டு எலக்ட்ரிக் ரக ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்டிமா ER மற்றும் நிக்ஸ் ER எனப்படும் இந்த இரண்டு மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது இந்திய சந்தையில் எக்ஸ்ஷோரூம் விலையாக, டெல்லியில் 68,750 ரூபாய் மற்றும் 69,750 முறையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் 2 ரூபாய் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், இரு-லித்தியம் இயன் வழக்கமாக இருக்கும் பேட்டரிகளுடன் இணைந்து இல்லாமல், புதுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.                                   இந்த வகை பேட்டரிகள் 100% சார்ஜ் செய்துக்கொள்ள வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 100km வரை வேகம் செல்லக்கூடியதாக இருக்கும். இந்த பேட்டரிக்களின் வாழ்நாள் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என்பதையும் குறிப்பிட்டது.

 

ஹீரோ எலக்ட்ரிக் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில், புதிய ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துவைத்த பிறகு தெரிவிக்கையில், "வாடிக்கையாளர்கள் பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்படுவதை பார்த்த பிறகு, நல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்க முடிவு செய்தோம். பொதுவாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேகம் குறைவாக இருக்கும். ஆனால், இதில் அவை அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளோம். மேலும் நிக்ஸ் ER மற்றும் ஆப்டிமா ER இரண்டும் அனைத்து வயதினரும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும்.                                                                                                                                             
 
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களால் பாராட்டப்படும் வகையில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். FAME II பயன்கள், எங்கள் தயாரிப்புகளை மேலும் மலிவு விலை கொண்டதாக இருக்கும் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.