‘ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்த ஹெரிடேஜ் குழுமம்’ சோதனையில் அம்பலம்!

 

‘ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்த ஹெரிடேஜ் குழுமம்’ சோதனையில் அம்பலம்!

ஹெரிடேஜ் குழுமம் ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்த ஹெரிடேஜ் குழுமம்’ சோதனையில் அம்பலம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹெரிடேஜ் மதுரை என்ற ஓட்டல் குழுமம் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சென்னை பல்லாவரத்தில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம் உட்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

‘ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்த ஹெரிடேஜ் குழுமம்’ சோதனையில் அம்பலம்!

அந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஹெரிடேஜ் குழுமம் ரூ.1,000 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடித்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.500 கோடி மதிப்புள்ள 300 ஏக்கர் நிலம் வாங்கியதும், ஹெரிடேஜ் உட்பட இரண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ததும் அம்பலமானதாக கூறியுள்ளனர். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களில் போலி ரசீதுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.