• December
    08
    Sunday

Main Area

Main



ரஜினி தட்டிக்கழித்த வாய்ப்பை விஜய் சேதுபதி விரும்பி ஏற்றார்....

விஜய் சேதுபதி - ரஜினி
விஜய் சேதுபதி - ரஜினி

தனது அரசியல் எண்ட்ரிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற ஒரே காரணத்துக்காக ஒரு நல்ல படத்தில் நடிப்பதைத் தவிர்த்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

‘காக்கா முட்டை’,’குற்றமே தண்டனை’,’ஆண்டவன் கட்டளை’ ஆகிய மூன்று  தரமான படங்களை இயக்கியுள்ளவர் மணிகண்டன். தற்போது தனது நான்காவது  படமாக ’கடைசி விவசாயி’என்ற படத்தை இயக்கி வருகிறார். 85 வயதுடைய நிஜ விவசாயி ஒருவர் கதையின் நாயகனாக இப்படத்தில் விஜய் சேதுபதி குறிப்பிடத்தக்க பாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். அவரது மிக வித்தியாமான தோற்றம்  கூட இரு தினங்களுக்கு முன்பு வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

kadaisi vivasayi

இந்நிலையில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் நடிக்கவைக்க மணிகண்டன் முதலில் ரஜினியை அணுகியதாகவும், கதையக் கேட்ட அவர் பதறிப்போய்,’விவகாரமான அரசியல் பேசும் அந்தக் கதையில் தான் நடிக்க விரும்பவில்லையென்றும் ஏற்கனவே பா.ரஞ்சித்தின் கபாலி, காலா படங்களில் நடித்த வகையில் சில அரசியல்வாதிகள் தன்மேல் கோபமாக இருப்பதாகவும் தெரிவித்து மணிகண்டனைத் தவிர்த்திருக்கிறார். இது குறித்து தனது நண்பர்கள் வட்டாரத்தில் கூறிய மணிகண்டன்,’கதையை எழுதி முடித்த உடன் இந்த கதை சொல்லும் கருத்து மிகப்பெரியது. எனவே ரஜினி போன்ற ஒரு கதாநாயகன் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அவர் இந்த கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. நான் அவரை சந்தித்து கதை சொன்ன அடுத்த வாரம் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்’என்று சொன்னதாக தகவல்.

kadaisi vivasayi

‘கடைசி விவசாயி’படம் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் அதில் பணிபுரியும் தொழில் நுட்பக்கலைஞர்கள் ரஜினி தன் வாழ்நாளில் ஒரு முக்கியமான படத்தைத் தவறவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.