சென்னையில் கொரோனாவின் கோரத்தாண்டவம்… இந்த பகுதிகளில் அதிகம் பாதிப்பு!

 

சென்னையில் கொரோனாவின் கோரத்தாண்டவம்… இந்த பகுதிகளில் அதிகம் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் சுமார் 3 லட்சத்து 33 ஆயிரத்து 804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 838 பேர் குணமடைந்த நிலையில், 31 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் சென்னையில் 4,744 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 304 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னையில் கொரோனாவின் கோரத்தாண்டவம்… இந்த பகுதிகளில் அதிகம் பாதிப்பு!

சென்னையை பொருத்தவரையில் 30 முதல் 39 வயதுடைய நபர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய வயதுடையவர்கள் 22% பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதையடுத்து 20 முதல் 29 வயதுடைய நபர்கள் 19 .52% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 50 முதல் 59 வயதுடையவர்கள் 15.67% பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2.4 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையில் அண்ணா நகர், தேனாம்பேட்டை ,கோடம்பாக்கம் ,வளசரவாக்கம் ,அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது.தேனாம்பேட்டை பொறுத்தவரை 3,368 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 3229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அண்ணா நகரில் 3122 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.