darbar
  • January
    19
    Sunday

Main Area

Main



ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் மிரட்ட வரும் 'பாட்ஷா' : எந்தெந்த தியேட்டர்களில் ரிலீஸ் தெரியுமா?

பாட்ஷா
பாட்ஷா

ரஜினியின் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பாட்ஷா'.  நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 1995ம் ஆண்டு ஜன.12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் கேங்க்ஸ்டர் படமான ‘பாட்ஷா’  ரிலீசானது.

batsha

ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி ரகுவரனின் வில்லத்தனமும் கலந்து புதுமையான கேங்க்ஸ்டர் கதையாக இப்படம் பேசப்பட்டது. இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இப்படம் ஒருவருடத்துக்கும் அதிகமாக திரையில் ஓடி வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

ttn

இந்நிலையில் கோவா சர்வதேச  திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாளை  கொண்டாடும் விதத்திலும், பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ்  முடிவெடுத்துள்ளது. 

அதன்படி, வரும்  டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது. இதில் சென்னை ராயப்பேட்டை, போரூர், கோயம்பேடு என்ற ஒருசில திரையங்குகளில் பாட்ஷா திரைப்படம் டிஜிட்டல் வடிவில்  மீண்டும் பட்டையை கிளப்ப வரவுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.