எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது என்றால், டெல்லி தொடங்கி, எங்கோ இருக்கும் கல்லுப்பட்டி கிராமம் வரை கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் களை கட் டி இருக்கும்.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த ஆண்டு சுதந்திர தின உற்சாகமாக கொண்டாடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன், சுதந்திர தினத்தை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு கலை நிகழ்சிகள் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

கலைநிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தாமல், தேசிய மாணவர் படை மாணவர்கள் மட்டும் பங்கேற்கச் செய்யலாம் என கூறியுள்ளது.

http://

தலைநகர் டெல்லியில் அதிக அளவில் பார்வையாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட மாட்டார்கள் என்றும், சமூக இடைவெளியுடன் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசும் பாதுகாப்பு பகுதிக்குள் சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை என்றும், சுமார் 100 பேர் மட்டுமே கீழ் தளத்தில் அமர அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கவுரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில், சுதந்திர தினத்தின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன் கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் என்றும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் விழாவிற்கு அழைக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

சுதந்திர தினத்துக்கு முன் நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகள் தொடங்கப்படவில்லை என்பதால், கலை நிகழ்ச்சிகள் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

எனினும், சுதந்திர தின கொடியேற்றி , உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்படி நடக்கப்போகிறது சுதந்திர தின கொண்டாட்டம்?

சுதந்திர தின கொண்டாட்டம் களை கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, யாருக்கும் தொற்று ஏற்படக்கூடாது என்கிற எச்சரிக்கையே நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டாக இருக்கும் என்பதே அரசு சொல்லவரும் செய்தியாக உள்ளது.

@ஷாலினி