கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 46,59,984 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தோர் விகிதம் 77.77% ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் போதிய அளவு சுடு தண்ணீர் பருக வேண்டும், நடைபயிற்சி, யோகா, சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் போதிய அளவு ஓய்வு எடுக்க வேண்டும், நன்றாக உறங்கவேண்டும் மற்றும் புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.