• March
    31
    Tuesday

Main Area

Main



இனி டூவீலர் ஓட்டணும்னா ரூ.1000 ரூபாயை கைல வெச்சுக்கோங்க!

 டூவீலர்
டூவீலர்

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை 2015 ஜூலை 1ல் அமலுக்கு வந்தது. எப்போதுமே நல்ல விஷயங்களை பின்பற்றுவதில் தீவிரமான சட்டம் வந்தாலொழிய பின்பற்றாத தமிழக மக்கள் இந்த சட்டத்திற்கும் செவி சாய்க்காமல் போக்குவரத்து காவலர்களை ஏமாற்றுவதிலேயே குறியாய் இருந்து வந்தார்கள். பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை இருப்பதைப் போன்றே இந்த சட்டத்திற்கும் செவி சாய்க்காமல் இருந்து வந்த மக்களுக்கு, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், அபராத தொகை 100 ரூபாய் என்பது பெரும் சிரமமாகத் தெரியவில்லை. போக்குவரத்து போலீசாரும் இந்த ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை மாத இறுதி நாட்களைத் தவிர பிற நாட்களில் பெரிதாகக் கண்டுக் கொள்ளாமல் இருந்து வந்தனர்.

 

traffic

தற்போது, நீதிமன்றத்தில் ஹெல்மெட் விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகி, சமீபத்தில் அபராத தொகையை 1000 ரூபாயாக உயர்த்தி பார்லிமென்டில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, தமிழகத்தில் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.  இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கையுடன் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் நேற்று ஹெல்மெட் அணிந்து செல்வோர் பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
சென்னை முழுவதுமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை என பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் நேற்று முழுவதும் கண்காணித்தனர்.

traffic signal

அப்போது 75 சதவீத வாகன ஓட்டிகள் 1000 ரூபாய் அபராதத்திற்கு பயந்து, ஹெல்மெட் அணிந்து சென்றது தெரிய வந்தது. சமீப காலங்களில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சிசிடிவி கேமரா மூலமாக டிஜிட்டல் போட்டோவுடன் அபராத நோட்டீஸ் வீட்டிற்கு வருவது பற்றியும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியைப் படித்தும், பல வாகன ஓட்டிகள் நெரிசலான காலை நேரங்களிலும், சிக்னல்களில் எச்சரிக்கைக் கோட்டைத் தாண்டாமல் வாகனங்களை நிறுத்தி பொறுமையாக காத்திருந்ததைக் காண முடிந்தது. இவற்றை எல்லாம் போக்குவரத்து போலீசார் 'வீடியோ'வாக பதிவு செய்தனர். பின்னால் அமர்ந்து இருந்தோரில் சிலர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளனர்.

traffic rules

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: அபராத தொகை 1000 ரூபாய் என்றதும் 75 சதவீத வாகன ஓட்டிகள் தற்போது ஹெல்மெட் அணிய துவங்கி விட்டனர். பின்னால் அமர்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அபராத தொகை 1000 ரூபாய் வசூலிக்க துவங்கி விட்டால் 100 சதவீதம் பேரும் ஹெல்மெட் அணிந்து செல்வார்கள் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்குவதற்கு அவர்களின் பெற்றோர்களும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.