மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை- மத்திய அரசு

 

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை- மத்திய அரசு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது அதாவது கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மக்களின் நலன் கருதி அதனை தகர்க்க முடியாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. அதனால் அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகள் அளிப்பதாக முதல்வர் அறிவித்தார். அதாவது, விண்ணப்பித்த எல்லாருக்குமே உடனடியாக பாஸ் கிடைக்கும் என்றும் ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். அதன் படி தற்போது விண்ணப்பித்த எல்லாருக்கும் இபாஸ் வழங்கப்பட்டுவருகிறது.

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை- மத்திய அரசு

இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.