கோடை வெப்ப பாதிப்பை தவிர்க்க உணவும் மூலிகைகள் – உணவுகள்!

 

கோடை வெப்ப பாதிப்பை தவிர்க்க உணவும் மூலிகைகள் – உணவுகள்!

கோடைக் காலத்தில் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. அதிகப்படியான வெப்பத்தை சமாளிக்க நம்முடைய உடலின் வெப்பநிலையை ஹைபோதாலமஸ் அதிகரிக்கச் செய்கிறது. அதிகப்படியான வெப்பத்தை எதிர்கொள்ள கோடையில் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் அருந்துவது நல்லது. இந்தக் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய உணவுகள் பற்றிப் பார்ப்போம்!

கோடையில் உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க உதவும் இயற்கை அளித்த கூல்டிரிங்க்ஸ் இளநீர்தான். ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த இளநீர் உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய வெப்ப அதிகரிப்பு பாதிப்பை தடுக்கிறது.

கோடை வெப்ப பாதிப்பை தவிர்க்க உணவும் மூலிகைகள் – உணவுகள்!

எல்லா காலத்திலும் கிடைக்கும் எளிய மூலிகை புதினா. ஃபிரஷ் புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பானங்கள், தேநீர் போன்றவை உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். புதினா உடலில் உள்ள நச்சுக்களையும் அகற்ற உதவும்.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலை மற்றும் செரிமான மண்டலத்தை குளிர்ச்சி அடைய செய்யும். பச்சையாக நெல்லிக்காயைக் கடித்து சாப்பிட பிடிக்காதவர்கள் தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வதில் தப்பே இல்லை!

நீர் மோர் உடலில் அதிகப்படியான வெப்பத்தை தனிக்கும். முழுக்க முழுக்க இது ப்ரோபயாடிக்ஸ் பானமும் கூட. அது மட்டுமின்றி வைட்டமின், தாதுஉப்புக்கள் நிறைந்தது என்பதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.

மோர் அருந்துபவர்கள் கொஞ்சம் வெந்தயத்தை அதில் போட்டு ஊற வைத்து குடித்தால் இன்னும் அதிக பலனை பெறலாம். இல்லை என்றால் வெறும் வெந்தயத்தைக் கூட சிறிது வாயில் போட்டு விழுங்கினாலும் போதும். உடல் குளிர்ச்சி அடையும். எலுமிச்சை சாரும் கோடை வெப்பத்தைத் தணிக்க உதவும்.

சந்தனக் கட்டைகளை வாங்கி அதை நன்கு உரசி சருமத்தில் தேய்த்து வந்தால் வெப்பம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் விலகும். உடலும் குளிர்ச்சி அடையும்.

கோடைக் காலத்தில் கற்றாழை ஜூஸ் அருந்துவது உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் கற்றாழை சருமத்தை குளிர்ச்சி அடைய செய்யும். சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைப்பதை உறுதி செய்யும்.

கோடைக் காலத்தில் தளர்வான வெளிர் நிற பருத்தி ஆடை அணிவது நல்லது. சிந்தடிக் உடைகளை அணிய வேண்டாம். அதிக காரமான, எண்ணெயில் பொறித்த உணவுகள், இறைச்சி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

காபி, காஃபின் உள்ள பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், மது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.