சைனஸ், தலைவலி போக்கும் மூலிகைத் தலையணைகள்!

 

சைனஸ், தலைவலி போக்கும் மூலிகைத் தலையணைகள்!

தலையணை… தூங்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள். சாதாரணமாக எல்லோர் வீடுகளில் பயன்படுத்தும் தலையணை பற்றி நமக்குத் தெரியும். ஆனால், நோய்களை விரட்டும் தலையணைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? இதோ… அதுபற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

சைனஸ், தலைவலி போக்கும் மூலிகைத் தலையணைகள்!

நொச்சித் தலையணை:
மூலிகைத் தலையணை ஒன்றும் புதிதல்ல. நம் முன்னோர் பயன்படுத்தி வந்ததுதான். காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டு குறிப்பிட்ட சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இது வடிவமைக்கப்படுகிறது. முதலில் நொச்சித் தலையணை பற்றி பார்ப்போம். மிகச் சாதாரணமாக இந்தத் தலையணையைச் செய்யலாம். இரண்டு கைப்பிடி அளவுக்கும் அதிகமாக நொச்சி இலைகளை எடுத்து தலையணையின் உள்ளே வைத்தால் தலையணை ரெடி.

வெறுமனே தலையணை உறைக்குள் வைத்து பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சில வாரங்கள் வரை பயன்படுத்த வேண்டுமென்றால், இலவம்பஞ்சு இலைகளின் நடுவே நொச்சி இலைகளை பதப்படுத்தி வைக்கலாம். இதனுடன் கூடுதலாக வேம்பு, மஞ்சணத்தி, துளசி, யூகலிப்டஸ், வேலிப்பருத்தி இலைகளையும் வைத்து பயன்படுத்தலாம். நொச்சி இலையுடன் பச்சரிசி சேர்த்து வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கமான தலையணை மாதிரியே இதை பயன்படுத்தலாம். இரவு தூங்கும்போது பயன்படுத்துவதால் தலைவலி, கழுத்துவலி சரியாகும். முக்கியமாக சைனஸ் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறலாம். அதுமட்டுமன்றி கழுத்துப்பகுதியில் வரும் வாதம், கழுத்து நரம்பு வலி, மூக்கடைப்பால் அவதிப்படுபவர்களும் இந்த தலையணையைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.

சைனஸ், தலைவலி போக்கும் மூலிகைத் தலையணைகள்!மருதாணி தலையணை:
அடுத்தது மருதாணி தலையணை. உடல் சூடு அதிகமாவதால் இரவில் தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு இந்தத் தலையணை பயன்படும். வழக்கமான தலையணையிலோ அல்லது புதிதாக இலவம்பஞ்சு வைத்து அதன் உள்ளே மருதாணி இலைகளை வைத்துப் பயன்படுத்தலாம். மருதாணிப்பூவை தலையணையில் வைத்துத் தூங்கினாலும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், புதிதாக பறித்து பயன்படுத்தும் பூக்களுக்கே பலன் உண்டு.

மருதாணி இலையை நன்றாக அரைத்து கை கால்களில் வைத்து வந்தாலும் இரவில் தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு பலன் கிடைக்கும். மருதாணி இலை மற்றும் பூக்கள் மனநலக் கோளாறுகளையும் சரி செய்யும் என்பதால் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து இந்த தலையணையைப் பயன்படுத்தலாம்.

சைனஸ், தலைவலி போக்கும் மூலிகைத் தலையணைகள்!
வேளைக்கீரை தலையணை:
வேளைக்கீரை என்று ஒரு மூலிகை உள்ளது. இதில் நல்லவேளை, நாய்வேளை என்ற வகைகள் உள்ளன. இவற்றை முழுச்செடியாக எடுத்து வந்து ஒரு கல்லால் அடித்து அந்தச் செடிகளில் உள்ள சாற்றினை நீக்கிவிட்டு தலையில் வைத்தால் தலையில் தேங்கியிருக்கும் நீர் அகன்றுவிடும். வேளைக்கீரையை தலையணையின் உள்ளே வைத்தும் பயன்படுத்தலாம்.

அரச இலை, ஆல இலை, அத்தி இலை, நொச்சி இலை, வேப்பிலை, மா இலை, யூகலிப்டஸ் இலை என எல்லா இலைகளையும் நிழலில் காயவைத்தும் தலையணை செய்யலாம். இந்தத் தலையணையை எல்லோரும் பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தை பெற்ற பெண்கள் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். டி.பி, எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தலையணையை பயன்படுத்தி பலன்பெறலாம்.

வெங்காயத் தலையணை:
வெங்காயத் தோலில் செய்யப்படுவது வெங்காயத் தலையணை. வெங்காயத்தோலை நன்றாகக் காயவைத்து அதன் சருகுகளை தலையணைக்குள் வைத்து பயன்படுத்தலாம். இதை தலையில் வைக்கக்கூடாது. மாறாக நாம் உட்கார்ந்திருக்கும்போது ஆசனவாயில் படும்படி வைத்து பயன்படுத்தினால் மூலம் மற்றும் சூட்டினால் வரும் பிரச்சினைகள் சரியாகும். நீண்டதூரம் கார், லாரி, பஸ் ஓட்டிச் செல்பவர்களுக்கு இந்த வெங்காயத் தலையணை நல்லது.

இதுபோன்று நிறைய மருத்துவக் குணம் உள்ள தலையணைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பலன்பெறுவோம்.