கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் பி… தடுக்க, தவிர்க்க வழிகள்!

 

கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் பி… தடுக்க, தவிர்க்க வழிகள்!

மனிதர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய தொற்றாக ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று உள்ளது. ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கலாம். இப்படி தொற்று பாதிப்பு நீடிக்கும் போது கல்லீரல் செயல் இழப்பு, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.

கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் பி… தடுக்க, தவிர்க்க வழிகள்!

இதன் அறிகுறிகள் மைல்ட்டு முதல் சிவியர் வரை என பிரிக்கப்படுகிறது. ஒருவருக்கு ஹைபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் பாதிப்பு வெளிப்பட இரண்டு வாரங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம்.

இந்த வைரஸ் எப்படி பரவும்?

ஹெபடைட்டிஸ் பி என்பது வைரஸ் தொற்றால் வரும் நோய். இதை பரப்பும் கிருமிக்கு ஹெபடைட்டிஸ் பி வைரஸ் (எச்.பி.வி) என்று பெயர். தும்மல், இருமல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவாது.

இது எய்ட்ஸ் போல பாலியல் தொடர்பு, தொற்று பாதித்தவர் பயன்படுத்திய ஊசி உள்ளிட்டவற்றை சரியாக கிருமி நாசினி செய்யாமல் பயன்படுத்துவது போன்றவற்றதால் பரவும். கர்ப்பிணிக்கு தொற்று இருந்தால் சிசுவுக்கு தொற்று ஏற்படும்.

அறிகுறி என்ன?

ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று ஏற்பட்டால், வயிற்று வலி, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், காய்ச்சல், மூட்டு வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல், சோர்வு, தளர்வு, கண் மற்றும் சருமம் நிறம் மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு இருப்பது போல மஞ்சளாக மாறும்.

ஹெபடைட்டிஸ் பி ஏற்படுத்தும் பாதிப்பு

லிவர் சிரோசிஸ்… ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டவர் கல்லீரல் வீக்கம் அடைய ஆரம்பிக்கும். இந்த வீக்கம் மறையும் போது கல்லீரலில் தழும்புகள் ஏற்படும். இப்படிபட்ட தழும்புகளை சரி செய்யவே முடியாது. இதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்.

கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு அதிகமாக உள்ளது.

ஹெபடைட்டிஸ் பாதிப்பு நீண்ட நாள் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாய்கள் வீக்கம் அடைவது, சிறுநீரக செயலிழப்பு என பல பாதிப்புகள் வரலாம்.

கண்டுபிடிப்பது எப்படி?

ரத்த பரிசோதனை மூலமாக ஹெபடைட்டிஸ் பி தொற்றை உறுதி செய்யலாம். அது கல்லீரலில் ஏற்படுத்திய பாதிப்பை அறிய கல்லீரல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, தேவை எனில் கல்லீரல் பயாப்ஸி செய்ய வேண்டியிருக்கும்.

கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் பி… தடுக்க, தவிர்க்க வழிகள்!

வைரஸ் கிருமி பரவலைத் தடுக்க…

நல்ல வேலையாக இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி உள்ளது.

குழந்தை பிறந்ததும் அதற்கு ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.

குடும்பத்தில் யாருக்காவது ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டால் மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

சுகாதார பணியாளர்கள், ரத்த மாதிரி எடுப்பவர்கள், பரிசோதனை செய்பவர்கள் என அனைவரும் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இது பாலியல் உறவு மூலம் பரவும் என்பதால் தொற்று உள்ளவருடன் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

சட்ட விரோதமாக போதை மருந்து எடுத்துக்கொள்பவர்கள் ஒரே ஊசி நீடிலை பலரும் எடுத்துக்கொள்வது வழக்கம். இதனால் ஹெபடைட்டிஸ் பரவும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு ஹெபடைட்டிஸ் பி வர வாய்ப்பு அதிகம். அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை

என்ன மாதிரியான பாதிப்பு என்பதை பொறுத்து யாருக்கு என்ன சிகிச்சை என்று மருத்துவர் முடிவு செய்வார். பாதிப்பு தீவிரமடைவதைத் தடுக்க சிகிச்சை வழங்கப்படும். கல்லீரல் முற்றிலும் செயலிழந்தால் அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று பாதிப்பை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.