மருதாணியும் மகாலட்சுமியும்!

 

மருதாணியும் மகாலட்சுமியும்!

மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
செல்வத்தின் அம்சமாகவும், பெண்களின் சொரூபமாகவும் இருப்பவள் மகாலட்சுமி தேவி. திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். பக்தர்களுக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

மருதாணியும் மகாலட்சுமியும்!

மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணியை சுக்கிரனின் அம்சம் என்கிறது ஜோதிடம். இது உடம்பின் சூட்டை தனித்து குளுமையை ஏற்படுத்தும். மேலும், அழகு சம்மந்தபட்ட பொருட்களுக்கெல்லாம் சுக்கிரனே காரகர் ஆவார். ஸ்திரி தோஷம், சுமங்கலி தோஷம் போன்ற தோஷங்களை ஜாதகத்தில் பெற்றவர்கள் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதாணியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு இட்டு வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

மருதாணியும் மகாலட்சுமியும்!

இராமாயணத்தில் ஸ்ரீஇராமர், இராவணனை போரில் வதம் செய்து சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
அதற்கு மருதாணின்செடி, எனக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.

மருதாணியும் மகாலட்சுமியும்!

அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

திருமண சடங்குகளில் மருதாணி முதலிடம் வகிக்கிறது. ஸ்ரீமகாலட்சுமியின் அருளாசி கிடைக்க மணமக்களுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான், வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முதல் நாள் மெஹந்தி விழா நடத்துகிறார்கள்.

மருதாணியும் மகாலட்சுமியும்!

மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும். அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள். மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதும் நம்பிக்கை.

மருதாணியும் மகாலட்சுமியும்!

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலட்சுமியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.