`அடுத்தவர் வீட்டில் மேய்ந்தது; கல்லால் விரட்டிய பெண்!’- சென்னையில் கோழியால் நடந்த கொலை

 

`அடுத்தவர் வீட்டில் மேய்ந்தது; கல்லால் விரட்டிய பெண்!’- சென்னையில் கோழியால் நடந்த கொலை

சென்னையில் கோழிக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்துள்ளது. இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

`அடுத்தவர் வீட்டில் மேய்ந்தது; கல்லால் விரட்டிய பெண்!’- சென்னையில் கோழியால் நடந்த கொலை

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமாரின் மகன் ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு பறவைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் கோழிகளை வாங்கி வீட்டில் வளர்த்துள்ளார். இதனால் மகனின் ஆசைக்காக 3 கோழிகளை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளார். கோழிகளை திறந்துவிட்ட சசிகுமார் குடும்பத்தினர், அருவில் காலி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்துள்ளன. பின்னர் கோழிகள், அருகில் உள்ள அன்பழகனின் வீட்டுக்குள் சென்றுள்ளன. அப்போது, அன்பழகனின் மனைவி அழகுமீனா கோழிகளை கல்லால் அடித்து விரட்டியுள்ளார். இதைப் பார்த்த சசிகுமாரின் மனைவி துர்காதேவி, அழகுமீனாவை கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றவே, சசிகுமார்- அன்பழகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

`அடுத்தவர் வீட்டில் மேய்ந்தது; கல்லால் விரட்டிய பெண்!’- சென்னையில் கோழியால் நடந்த கொலை

அப்போது,சசிகுமாரரை அன்பழகனின் குடும்பத்தினர் கீழே தள்ளியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் மயக்கம் அடைந்து விழுந்தார். உடனடியாக சசிகுமாரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சசிகுமாரை கொலை செய்த வழக்கில் அன்பழகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்தவர் வீட்டு கோழி தன்னுடைய வீட்டிற்கு வந்து மேய்ந்ததால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் திருமுல்லைவாயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.