யாரைக் காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்? – ஹேம்நாத்தின் தந்தை

 

யாரைக் காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்? – ஹேம்நாத்தின் தந்தை

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. அவரது கன்னத்தில் காயம் இருந்ததால் அவர் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கணவன் கொடுத்த மன அழுத்தமே சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்தனர்,

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக இரண்டாம் கட்ட விசாரணையாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடிகை சித்ராவின் மாமானார் மற்றும் மாமியாரிடம் 4 மணி நேரமாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினர்.

யாரைக் காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்? – ஹேம்நாத்தின் தந்தை

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், “ஆறு நாட்களாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று ஆர்டிஓவிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினோம். இன்று என்னுடைய மகன் விசாரணையில் கலந்து கொண்டு அவர் தரப்பு நியாயத்தை கூறியிருக்க வேண்டும். ஆனால் நேற்று அவசர கதியில் அவரை கைது செய்து விட்டார்கள். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. யாரை காப்பாற்றுவதற்காக இந்த கைது சம்பவம் நடந்தது என்று எனக்கு புரியவில்லை.

சித்ராவிடம் இருந்து பணமோ பொருளோ எப்போதும் நாங்கள் கேட்டதில்லை. வரதட்சணை கொடுமை இல்லை. என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்றுதான் கூறியிருந்தோம்” என தெரிவித்தார்.