பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலகமாக சமூக வலைதளங்களில் முதல்வர் ஹேமந்த் சோரனை பல்வேறு விஷயங்களில் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார் பா.ஜ.க. எம்.பி.யான நிஷிகாந்த் துபே. 2013ம் ஆண்டில் மும்பையில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டி அண்மையில் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நிஷிகாந்த் பதிவு செய்து இருந்தார்.

பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

நிஷிகாந்தின் குற்றச்சாட்டுக்கு சட்டப்படி பதில் அளிப்பேன் என முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த 4ம் தேதியன்று ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில், பா.ஜ. எம்.பி. நிஷிகாந்த் துபே, பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களிடம் தலா ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு முதல்வர் ஹேமந்த் சோரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. வரும் 22ம் தேதியன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

முதல்வர் ஹேமந்த் சோரனின் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே டிவிட்டரில், முதல்வர் ஹேமந்த் சோரன் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தியதாக ஒரு பெண் மும்பையில் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் மீது வழக்கு போடுவதற்கு பதிலாக என் மீது நீங்க வழக்கு பதிவு செய்கிறீர்கள். சரயு ராய் போன்று முதல்ருக்கு எதிராக போராடுவதற்கு வாய்ப்பு அளித்தற்கு நன்றி என பதிவு செய்தார்.