தங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூட போராடும் விவசாயிகளுக்கு தெரியாது… பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி

 

தங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூட போராடும் விவசாயிகளுக்கு தெரியாது… பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூட தெரியாது என்று பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி தெரிவித்தார்.

பிரபல பாலிவுட் நடிகையும், மதுரா தொகுதி பா.ஜ.க எம்.பி.யுமான ஹேமா மாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்தது நல்லது. இது சூழ்நிலையை அமைதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் ஒரு மித்த கருத்துக்கு வர விவசாயிகள் தயாராக இல்லை. அவர்களுக்கு என்ன வேண்டும், வேளாண் சட்டங்களில் தங்களுக்கு என்ன பிரச்சினை என்பது கூட விவசாயிகளுக்கு தெரியாது.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூட போராடும் விவசாயிகளுக்கு தெரியாது… பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

இதன் அர்த்தம், யாரோ போராட்டம் செய்யுமாறு கூறியதால் அவர்கள் (விவசாயிகள்) அதனை செய்கிறார்கள். பஞ்சாப் நிறைய இழப்புகளை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் செல்போன் டவர்களை சேதப்படுத்தியதை பார்ப்பதற்கு நல்லதாக இல்லை. பேச்சுவார்த்தை வரும்படி அரசாங்கம் அவர்களை தொடர்ந்து அழைக்கிறது, ஆனால் அவர்களிடம் ஒரு செயல் திட்டம் கூட இல்லை. கொரோனா வைரஸ் இன்னும் முடிந்து விடவில்லை. எங்கள் கட்சியை சேர்ந்த பலர் கொரோனா வைரஸ் நோயால் உயிர் இழந்தனர்.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூட போராடும் விவசாயிகளுக்கு தெரியாது… பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி
கோவிட்-19 தடுப்பூசி

பொது மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்எச்சரிக்கையாக (மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல்) இல்லாமல் சுற்றினால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும். தற்போது புதிய பறவைக் காய்ச்சலுடன், ஒவ்வொருவரும் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் கவனித்து கொள்ள வேண்டும். தற்போது இங்கு தடுப்பூசி வருவது நல்லது. என் முறை வரும் போது நான் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். எதிர்க்கட்சிகள் எப்போதும் ஏதாவது சொல்கிறார்கள். அரசு என்ன சொன்னாலும் அதற்கு நேர்மாறாக அவர்கள் சொல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.