Home லைப்ஸ்டைல் ஆணுலகம் தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!

தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!

தாம்பத்யம் என்றதும் சிலர் வெட்கப்படுவார்கள். இன்னும் சிலர் அச்சப்படுவதுவம், அருவருப்பு கொள்வதுமுண்டு. அது ஓர் அன்புப் பகிர்தல் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய என்னென்னவோ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலன் கிடைப்பதில்லை. நம் வீடுகளில் சமையலில் இடம்பெறும் கீரைகள், பழங்கள், காய்கள், பூக்களைப் பயன்படுத்தி அந்தக் குறைபாடுகளை மிக எளிதாகச் சரி செய்யலாம். சரியாக முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!

தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!
ஆண்மைக் குறைவால் அவதிப்படும் ஆண்களும், தாம்பத்யத்தில் விருப்பமில்லாத ஆண் பெண் இருவரும் இந்தக் கீரையுடன் சின்ன வெங்காயம், நெய் சேர்த்து வேக வைத்துக் கடைந்து காலை, மாலை உணவில் சேர்த்து வந்தால் முழு பலன் அடையலாம். பொதுவாக, அரைக்கீரையை சமைக்கும்போது அதனுடன் புளி சேர்த்துச் சமைப்பது வழக்கம். புளி சேர்த்தால் அத்தனை பலன் கிடைக்காது. ஆகவே அரைக்கீரையுடன் மிளகு, நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தாலும் தாது வளரும், கைமேல் பலன் கிடைக்கும். இது தேகத்தில் அழகை அதிகரிக்கச் செய்வதுடன் நரம்புத் தளர்ச்சியை நீக்கி திடகாத்திரமான தேகத்தை வளர்க்கச் செய்யும். பொதுவாக கீரைகளை காலை மற்றும் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சோற்றுக் கற்றாழையின் வேர்களை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து இட்லிப் பானையில் வைத்து வேக வைக்க வேண்டும். தண்ணீருக்குப் பதில் பாலை ஊற்றி வேக வைத்து காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவு மேம்படும். ஆண்மைப் பிரச்னையை தீர்க்க உதவும் என்றபோதிலும் ஆண் பெண் இருவருமே சாப்பிட்டு வரலாம்.

தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!
இளம் வயதில் சில தவறான பழக்கங்களால் சிலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுண்டு. இத்தகையப் பிரச்னைகளைப் போக்க நாட்டுக் கோழி முட்டைகளைச் சாப்பிடலாம். இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை ஒரு மண் பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சிறிது சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து லேசான சூட்டோடு சாப்பிட்டு விட வேண்டும். காலை உணவுக்குப் பதில் இந்த முட்டையை மட்டும் சாப்பிட்டு பால் குடித்து வரலாம். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் முழு பலன் கிடைக்கும்.
முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளுடன் சேர்த்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் அதிக நாட்டம் உண்டாகும். உடல் சோர்ந்து உள்ளம் சோர்ந்து போனவர்கள் தினமும் நான்கைந்து முருங்கைப்பூக்களைத் தினமும் இரண்டுவேளை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூவைச் சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சாப்பிட்டு பலனடையலாம். இந்த முருங்கைப்பூக்களை இயற்கை வயாகரா என்று சொன்னால் அது மிகையாகாது. பக்க விளைவுகள் இல்லாதது, செலவில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் முருங்கைக்கீரையப் பொடியாக நறுக்கி அதனுடன் கேரட் துருவிப் போட்டு பசு நெய் சேர்த்து கோழி முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு நீங்குவதோடு முழுமையான தாம்பத்யம் கிடைக்கும். பிஞ்சு முருங்கைக்காய்களை தணலில் காட்டி சாறு பிழிந்து குடிப்பது, சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு நன்றாக வேக வைத்து சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பது போன்றவற்றின்மூலம் தாம்பத்ய உறவில் குறைவின்றி செயலாற்ற முடியும். இதே முருங்கைப்பிஞ்சுகளை பட்டாணி அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து பச்சையாகச் சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் சிறந்து விளங்கும்.

தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!
வெற்றிலையுடன் கால் அரிசி அளவு கோரோசனையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தின்மீது ஆர்வம் ஏற்படும். ஆண் பெண் இருவருமே இதைச் சாப்பிட்டு பலனை அடையலாம். இரண்டு வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய் ஒரு அரிசி எடை, ஜாதிப்பத்திரி ஒரு அரிசி எடை, கஸ்தூரி ஒரு கடுகு அளவு, ஏலக்காய் ஒன்று , லவங்கம் ஒன்று, பாதாம் அரை பருப்பு, முந்திரி அரை பருப்பு, திராட்சை 4, குல்கந்து கால் டீஸ்பூன் சேர்த்து இரவு உணவுக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறுவதோடு உடல், மனம் ஆரோக்கியம் உண்டாகி தாம்பத்யத்தில் சிறப்பான பலனைப் பெற்றுத்தரும்.
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு தூங்கப்போகும் முன் மூன்று அத்திப்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு பால் அருந்திவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இதை ஆண் பெண் இருவருமே பின்பற்றலாம்.
சின்ன வெங்காயத்தை தேன் விட்டு வதக்கி இரவு உறங்கபோவதற்கு முன் சாப்பிட்டு பசும்பால் குடித்து வந்தால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். இதேபோல் தாம்பத்ய உறவுக்கு முன் சின்ன வெங்காயத்தை வாயில் போட்டு அதன் சாற்றை மெதுவாக விழுங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல் சின்ன வெங்காயம் அல்லது வெள்ளை வெங்காயத்தை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.

தாம்பத்யம் சிறக்க உதவும் முருங்கைப்பூ, வெங்காயம், வெற்றிலை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மரணத்தை சந்திக்க வைக்கும் ‘புதிய பூஞ்சை தொற்று ரெடி’… பீதியை கிளப்பும் அமெரிக்கா!

அமெரிக்காவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய கேண்டிடா ஆரிஸ் என்ற புதிய தொற்று கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மரணத்தின் விளிம்பில் கொண்டு...

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

ஒரு சமுதாய நலக்கூடம் இருந்தும் அதை அப்பகுதியினர் பயன்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது. அதில் பல்லாயிரக்கணக்கான அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தும் அதுவும் யாருக்கும் பிரயோஜனம் இன்றி...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டம் போடுங்கள் : தமிழக பாஜக வலியறுத்தல்!

இந்து மத கடவுள்களையும் பிரதமரையும் அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தினர். கன்னியாகுமரியில்...

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...
- Advertisment -
TopTamilNews