’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

 

’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

எனது ஒருமாத ஊதியத்தை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வாங்க HELPKARURBREATH பிரசாரத்திற்கு அளிக்கிறேன். தாங்களும் முடிந்த அளவு நன்கொடை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.ஆக்சிஜன் மற்றும் மருத்துவவசதிக் குறைவால் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் ஒரு உயிர் இழப்பு கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசதிக்கும் தொகுதியில், ஏற்கனவே, தொற்று பரவல் எண்ணிக்கை முன்னர் இருந்ததைவிட வேகமாக அதிகரித்து வருகிறது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் கரூர் எம்.பி. ஜோதிமணி.

’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

கொரோனா இரண்டாவது அலையில் தமிழகம் அதிகம் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, மருத்துவமனையில் உபகரணங்கள் , பெட்கள் தட்டுப்பாடு நிலவும் அளவிற்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் பலர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கரூர் மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது. அந்த வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

இந்நிலையில் ’’கரூர் முயற்சிக்கு உதவுங்கள்’’ என்று ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ’’ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வசதி குறைவாக கரூர் நாடாளுமன்ற தொகுதி ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம்’’ என்கிறார்.

அவர் மேலும், ‘’கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, விராலிமலை, வேடசந்தூர், மணப்பாறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை கொண்ட தொகுதி இது. கடந்த ஆண்டு தொடங்கிய போது எனது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வெண்டிலேட்டர் உள்ளிட்ட முக்கிய மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மத்திய அரசால் ஒரு நாள் தொடரை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த இக்கட்டான சூழலில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு கரூரில் இருக்கும் தொழில் துறையினர் மற்றும் இதர ஆர்வலர்களுடன் இணைந்து இந்த நிதி திரட்டும் முயற்சியை துவங்கி இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார் ஜோதிமணி.

மேலும், ‘’ 4 மாவட்டங்களின் ஆட்சியர்கள் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவர் உங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் மடங்கு உயர்த்தி உள்ளோம் வேகத்திற்கு போதுமானதாக இருக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றும் தெரிவிக்கிறார் ஜோதிமணி.

’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

’’மருத்துவர்களின் ஆலோசனைப்படி, 100 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். இது ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவையை குறைக்க உதவும். மாநில அரசு எடுத்து வரும் முயற்சிக்கு இது உறுதுணையாக அமையும்.

தாங்கள் அளிக்கும் நன்கொடை, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மற்ற அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான 100 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வாங்க பயன்படுத்தப்படும். இது தவிர தேவைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்கள், நிவாரணப்பொருட்கள், மருந்துகள் வாங்க பயன்படுத்தப்படும்’’என்கிறார்.

’கரூர் மூச்சுக்கு உதவுங்கள்’-ஒரு மாத சம்பளத்தை அளித்த ஜோதிமணி எம்.பி.

’’ஒரு ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் ரூபாய்.84,000 முதல் ரூபாய்1,20,000 வரை விலை மதீப்பீடு செய்யப்படுகிறது. கரூரில் உள்ள அட்வென்சர் சாரிடபில் ட்ரஸ்ட் மூலம் இவை கொள்முதல் செய்யப்பட்டு, மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்படும். நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு.

உயிர்காக்கும் இந்த உன்னத பணிக்காக என் ஒருமாத ஊதியம் ரூபாய் ஒரு லட்சத்தை அளிக்கிறேன். தாங்களும் தங்களால் இயன்ற அளவு தாராளமாக நன்கொடை அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு உயிர்காக்க உதவும்.ஒரு உயிர்காக்க உதவும்.’’என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.