ஹைடெல்பெர்க் சிமெண்ட் லாபம் 38 சதவீதம் வீழ்ச்சி….

 

ஹைடெல்பெர்க் சிமெண்ட் லாபம் 38 சதவீதம் வீழ்ச்சி….

ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.48.94 கோடி ஈட்டியுள்ளது.

ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.48.94 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38.07 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.79.03 கோடியாக இருந்தது.

ஹைடெல்பெர்க் சிமெண்ட் லாபம் 38 சதவீதம் வீழ்ச்சி….
சிமெண்ட் மூடைகள்

2020 ஜூன் காலாண்டில் ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.407.70 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.589.23 கோடியாக இருந்தது. ஆக, கடந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 30.80 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஹைடெல்பெர்க் சிமெண்ட் லாபம் 38 சதவீதம் வீழ்ச்சி….
காங்கிரிட் கலவை

2020 ஜூன் காலாண்டில் ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.342.99 கோடியாக குறைந்துள்ளது. லாக்டவுன் காரணமாக 2020 ஜூன் காலாண்டில் ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அளவு அடிப்படையில் 32 சதவீதம் சரிவடைந்துள்ளது. விற்பனை குறைந்ததால் அதன் தாக்கம் வருவாய் மற்றும் லாபத்தில் எதிரொலித்துள்ளது என ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.