கன மழை மட்டுமல்ல… சென்னையின் பல பகுதிகள் கடலில் மூழ்கவும் வாய்ப்பு! – ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை

கன மழை மட்டுமல்ல… சென்னையின் பல பகுதிகள் கடலில் மூழ்கவும் வாய்ப்பு! – ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை

சென்னையில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு அதிகரித்து வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில் 2015ம் ஆண்டு ஏற்பட்டதைவிட கடுமையான மழைப்பொழிவு, வெள்ளம் சென்னையில் ஏற்படும் என்றும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இந்த நிலையில் மழை வெள்ளம் மட்டுமல்ல, சென்னையின் கடலோரப் பகுதிகள் பலரும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பாலாஜி எச்சரக்கைவிடுத்துள்ளார்.

கன மழை மட்டுமல்ல… சென்னையின் பல பகுதிகள் கடலில் மூழ்கவும் வாய்ப்பு! – ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தை (ஐஐடி) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட ஒவ்வொரு 20 ஆண்டு கால இடைவெளியிலும் சென்னையில் மழைப்பொழிவின் தீவிரம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுபோன்ற தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பேசிய பேராசிரியர் பாலாஜி, “2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மெரினா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரைப்பகுதிகள் பலவும் மழையின் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு கடலால் ஆட்கொள்ளப்படலாம். மேலும், சென்னை மற்றும் அதைச் சுற்றிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்னை ஏற்படக்கூடும்” என்று கூறியுள்ளார்.

கன மழை மட்டுமல்ல… சென்னையின் பல பகுதிகள் கடலில் மூழ்கவும் வாய்ப்பு! – ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை
இதை எதிர்கொள்ள அரசு இப்போதே திட்டமிடுவது அவசியம். சென்னையில் கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் வழியாக வெள்ள நீர் கடலில் கலக்கிறது. இது தவிர பக்கிங்காம் கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இந்த மூன்று நீர் நிலையிலும் ஆக்கிரமிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதை சீர் செய்து, மழை வெள்ளம் வெளியேற பாதுகாப்பான வழிமுறைகளை உருவாக்கினால் பாதிப்பைக் குறைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.