தமிழகத்தில் “இந்த 10 மாவட்டங்களில்” கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில்  “இந்த 10 மாவட்டங்களில்” கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  “இந்த 10 மாவட்டங்களில்” கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. முன்னதாக தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்  “இந்த 10 மாவட்டங்களில்” கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.