‘நீலகிரி மாவட்டத்துக்கு தொடரும் ரெட் அலெர்ட்’ இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

 

‘நீலகிரி மாவட்டத்துக்கு தொடரும் ரெட் அலெர்ட்’ இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை தொடருவதால், அம்மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரெட் அலெர்ட் விடுத்திருந்தது. அங்கு மழை நீடிப்பதால் அம்மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டார். அதாவது மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்க முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் நிலச்சரிவு பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘நீலகிரி மாவட்டத்துக்கு தொடரும் ரெட் அலெர்ட்’ இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் தொடருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் காற்று அதிகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.