சென்னையில் பலத்த காற்றுடன் மழை.. 3 மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

 

சென்னையில் பலத்த காற்றுடன் மழை.. 3 மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

ஆலந்தூர், அடையாறு, தரமணி, பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூர், அண்ணா நகர், ஆவடி, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, அம்பத்தூர், தாம்பரம், விருகம்பாக்கம், ராயபுரம், பட்டாபிராம், போரூர், முகப்பேர், நொளம்பூர் ஆகிய பகுதிகள் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது. வெப்பச் சலனத்தால் மழை பெய்வதாகவும் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் பலத்த காற்றுடன் மழை.. 3 மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

முன்னதாக, அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயலின் கோரத்தாண்டவத்தால் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. குஜராத்தில் புயல் நிவாரண பணிகளுக்காக பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் பலத்த காற்றுடன் மழை.. 3 மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கோவை, நீலகிரி, தேனி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். சென்னையிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.