“தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் மிக கனமழை” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

“தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் மிக கனமழை” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி தர்மபுரி ,சேலம், கிருஷ்ணகிரி ,திருப்பத்தூர் ,வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் மிக கனமழை” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதேபோல் வருகின்ற 14ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் வருகின்ற 15ஆம் தேதி பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் ,லட்சத்தீவு ,மாலத்தீவு பகுதியில் மே 14ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மே 14, 15 சூறாவளி காற்று வீசக்கூடும்.

“தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் மிக கனமழை” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றில் இயல்பான வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை இயல்புக்கு மாறாக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.