சென்னையில் மேலும் 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்!

 

சென்னையில் மேலும்  6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்!

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேலும்  6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்றிரவு முதலே சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சைதாப்பேட்டை, அடையாறு ,மெரினா , பெசன்ட் நகர் ,மயிலாப்பூர் ,கிண்டி, வடபழனி ,விமானநிலையம் ,பல்லாவரம் ,தாம்பரம் ,பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பலம் , கோயம்பேடு , ஆவடி , பட்டாபிராம் , புழல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் மேலும்  6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்!

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 6 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முன்னதாக சென்னையில் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி நிரம்பி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.