தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

 

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கேரளாவில் ஜூன் 5 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக ஜூன் 1 ஆம் தேதியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி நேற்று கேரளாவில் பருவமழை தொடங்கியது.கடந்த சில நாட்களாகவே கேரளாவின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் மழை இன்னும் கனமழை பெய்தது.

 

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோழிக்கோடு மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையின் போது 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.