‘கனமழை எச்சரிக்கை’ – விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்!

 

‘கனமழை எச்சரிக்கை’ – விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்!

தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் உடனடியாக பயிர்க்காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

‘கனமழை எச்சரிக்கை’ – விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்!

தென்வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ நகருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்த நிவர் புயல் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகும் நிலை ஏற்பட்டது.

‘கனமழை எச்சரிக்கை’ – விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்!

தற்போது தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தென்மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உடனே காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்துரை அறிவுறுத்தியுள்ளது. டிச.4 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், கடைசி நாளான டிச.15 வரை காத்திருக்காமல் உடனே காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடங்களில் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.