நவம்பர் 23, 24ல் அதீத கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நவம்பர் 23, 24ல் அதீத கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 23, 24ல் அதீத கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாகியுள்ளது. நாளை மறுநாள்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்த நிலையில் முன்கூட்டியே உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23, 24ல் அதீத கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நவ 24, 25 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவ24 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.