தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சின்ன கல்லாறில் 2 செ.மீ மழையும், வால்பாறை, சின்கோனாவில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, தென் மேற்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 39 டிகிரியும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்ஷியரை ஒட்டி வெப்பம் பதிவாகும்” என்று கூறியுள்ளது.