இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வட தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர் ,திண்டுக்கல் ,திருப்பூர் , தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வருகின்ற 31ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வருகின்ற செப்டம்பர் 2-ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், கேரளா மற்றும் கடலோர கர்நாடகா கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் செய்யப்படும் என்பதால் மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.