தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. தென் மேற்கு- மத்திய தரைக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.