மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை! – அடுத்த 48 மணி நேரத்துக்கு எச்சரிக்கை

 

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை! – அடுத்த 48 மணி நேரத்துக்கு எச்சரிக்கை

மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மும்பையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை! – அடுத்த 48 மணி நேரத்துக்கு எச்சரிக்கைதென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிராவில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை நகரில் கன மழை பெய்து வருகிறது. நேற்று தெற்கு மும்பையில் நேற்று மூன்று மணி நேரத்தில் 157 மி.மீ அளவுக்கு மழை பெய்தது.
அடுத்த 48 மணி நேரத்துக்கு மும்பையின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை! – அடுத்த 48 மணி நேரத்துக்கு எச்சரிக்கைமேலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும். இன்று காலை 11.30 அளவில் கடல் கொந்தளிப்பு அதிகரித்து 4.57 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழ வாய்ப்புள்ளது. எனவே, கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருப்பது நல்லது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை! – அடுத்த 48 மணி நேரத்துக்கு எச்சரிக்கைகன மழை காரணமாக அந்தேரி, தாதர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றை வெளியேற்ற அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தேரி பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.