தர்மபுரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

 

தர்மபுரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் தர்மபுரி, ஒகேனக்கல்,

தர்மபுரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை வரை மழை நீடித்த நிலையில், அதிகபட்சமாக ஒகேனக்கலில் 81 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 46 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை பதிவானது. இந்த தொடர் மழையின் காரணமாக

தர்மபுரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையில், நடப்பாண்டில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,.