கோவையில் கனமழை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

கோவையில் கனமழை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

கோவையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது மேலும் பகல் நேரத்தில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது இந்த நிலையில் இன்று காலை வெயில் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது மேலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

கோவையில் கனமழை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

இந்த நிலையில் மதியம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், காந்திபுரம், ஆர்எஸ் புரம் , ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர் , அவினாசி சாலை திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்ததால் மழை வெள்ளம் சாலைகளில் ஆறு போல ஓடியது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் கனமழை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

மேலும் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது .