கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

 

கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று கோவை, தேனி மாவட்டங்களில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

மேலும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் உள்ள சோலையாறு பகுதியில் 9 சென்டி மீட்டர், சின்னக்கல்லார் பகுதியில் 7 சென்டிமீட்டர், வால்பாறை பகுதியில் 6 சென்டிமீட்டர், சின்கோனா பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.