சென்னை மற்றும் செங்கல்பட்டில் கனமழை…!

 

சென்னை மற்றும் செங்கல்பட்டில் கனமழை…!

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் செங்கல்பட்டில் கனமழை…!

வடகிழக்கு பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருபுறம் குளிர் வாட்டி எடுத்து வர கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோரத்தில் லேசான மழையும், தென் கடலோரத்தில் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னை மற்றும் செங்கல்பட்டில் கனமழை…!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கிண்டி ,வடபழனி, விமானநிலையம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ,மாம்பலம் , கோயம்பேடு ,ஆவடி ,பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா ,பெசன்ட் நகர் ,மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில் கேளம்பாக்கம், புழல், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் இரவு முதலே மழை பெய்து வருகிறது. மழையினால் சென்னை நகரம் முழுவதுமே இருளால் சூழ, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.