8 மாவட்டங்களில் கனமழை: எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

8 மாவட்டங்களில் கனமழை:  எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை:  எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுக்கோட்டை ,நாகை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேலடுக்கு சுழற்சியால், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை:  எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு ,அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பழைய கட்டடங்களில் இருந்து வெளியேறி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மீண்டும் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.