அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

 

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

சென்னையில் இன்றும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ,மீனம்பாக்கம் ,பல்லாவரம்,சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, கொளப்பாக்கம், போரூர்,வளசரவாக்கம், ராமாபுரம் ,ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், திருமுல்லைவாயல், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., தாம்பரம் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.