தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்றுமுதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது. எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.