4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்வது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும் மழையால் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் பரவலாக இருக்கிறது. நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ய்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், காற்று பலமாக வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.