ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கனமழை… ரயில்வே பணிமனை சுவர் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

 

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கனமழை… ரயில்வே பணிமனை சுவர் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

ஈரோடு

ஈரோடு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில், இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி, கடந்த 20 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளித்தன. ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ரெயில்வே பணிமனை சுற்றுச்சுவர், மழையில் இடிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கனமழை… ரயில்வே பணிமனை சுவர் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

இதேபோல், மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாகவும் பரவலாக மழை பெய்துள்ளது. பவானியில் அதிகபட்சமாக 33.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல், ஈரோடு மாநகர், கோபி, சென்னிமலை, பெருந்துறை, அம்மாபேட்டை, தாளவாடி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 2-வது நாளாக இரவும் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் ஈரோடு மாவட்டத்தில் இன்று பலத்த மழை பெய்யும் என அறிவித்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை விபரம்:- பவானி – 33.2 மி.மீ, ஈரோடு – 12 மி.மீ , கோபி – 6 மி.மீ , சென்னிமலை – 5 மி.மீ, பெருந்துறை – 4 மி.மீ, வரட்டுப்பள்ளம் – 3.4 மி.மீ, கவுந்தப்பாடி – 3.2 மி.மீ, அம்மாபேட்டை – 3.2 மி.மீ, தாளவாடி – 2.4 மி.மீ, பவானிசாகர் – 2.2. மி.மீ. மழை பதிவாகியது.