இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

 

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ,வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையும், ஒரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அல்லது லேசான மழை பெய்ய கூடும். வருகின்ற 24ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி ,திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ,எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

25 ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

சென்னையில் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும்.

இன்று முதல் வருகின்ற 25 ஆம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார்வளைகுடா ,ஆந்திர கடலோரம், மேற்கு வங்க கடல், மத்திய வங்கக் கடல், கர்நாடகா, கேரளா ,லட்சத்தீவு ,தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.