தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய கனமழை காலை முதல் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

சென்னையில் அதிகபட்சமாக மாம்பலம், சோழிங்கநல்லூரில் தலா 8செமீ. மழை பதிவாகியுள்ளது. ஆலந்தூர் , புரசைவாக்கம், பெரம்பூர், மயிலாப்பூரில் தலா 7செமீ., தண்டையார்பேட்டையில் 6செமீ மழையும் பதிவாகியுள்ளது.