புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.23 இல் கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால்  நவ.23 இல் கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால்  நவ.23 இல் கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் வருகின்ற 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும். இதனால் நவம்பர் 23ஆம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை யில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 24ல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால்  நவ.23 இல் கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

அதேபோல் அடுத்த 48 மணிநேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.