darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



சென்னையில் கன மழை : உதவி எண்கள் அறிவிப்பு !

Help line
Help line

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிற்காமல் மழை பெய்கிறது. இதனால், கிண்டி, அண்ணாநகர், கே.கே நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பிரதான இடங்களில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, பெய்த மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதில், மீண்டும் கனமழை பெய்தால் மக்களின் நிலை மோசமாகிவிடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 

rain

இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களைச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 044-25384520, 044-25384530 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.