கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

 

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் நேற்று இரவு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

காலை 4 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கடுமையான மழை பெய்துவருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஏராளாமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி 20 வீடுகள் சேதமடைந்த நிலையில், 86 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.