சென்னையில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி!

 

சென்னையில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. ஜனவரி மாதத்திலும் மழை தொடர்ந்து, பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக கடந்த 19ம் தேதி வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருந்தது. அதன் படி, தற்போது மழை தணிந்து, தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கின்றன.

சென்னையில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி!

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை கடும் பணி மூட்டம் நிலவியது. சென்னையைத் தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பனி மூட்டம் நிலவியது. காலை 8 மணிக்கும் மேலாக பனிமூட்டம் நீடித்ததால், அலுவலகத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்திலும், பனி மூட்டத்தால் விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக தெரிகிறது.